Connect with us

ஓர் ஆணிடம் ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது!

வாழ்க்கை - Living

ஓர் ஆணிடம் ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது!

ஓர் ஆணிடம் ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது!
ஆண் பெண் என்ற இரு படைப்பும் ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்படுவதுதான் இயற்கையின் விதி. ஆனால் இந்த ஈர்ப்பின் அடிப்படை எது என்பதே அது என்ன உறவு என அடையாளப்படுத்தப்படுகிறது. காதலும் அப்படித்தான்.

உள்ளம் நினைக்கின்றதா எண்ணம் சிந்துகின்றதா என துல்லியமாக சொல்ல முடியாத ஒரு நிலையைத் தருவதுதான் காதல். இதுதான் காதல் என பலர் பலவிதமான முகங்களைத் தந்து அதற்கு பெயர் சூட்டிக் கொள்வர். சிலருக்கு பார்த்தவுடனே காதல், சிலருக்கு பழகினால் மட்டும் தான் காதல், சிலர் வெவ்வேறு சிந்தனை கொண்டிருந்தால் காதல், சிலருக்கு ஒரே பாதையை நோக்கி சிந்திப்பதுதான் காதல் என காதல் மட்டும் பல பரிமாணங்களிலும் பரிநாமங்களிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தோற்றம் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான். அன்பு. தான் காதலிக்கும் ஒருத்தரிடம் தன் அன்பை செலுத்த வேண்டும். தன்னுடைய அரவணைப்பு அவரின் அகத்தையும் முகத்தையும் மகிழ வைக்க வேண்டும் என்பதுதான் காதல். காதல் மட்டும்தான் தான் கண்ணாடியைப் போன்றது. உன் எதிரே இருக்கும் நபர் உன் சுக துக்கங்களைப் பிரதிபலிப்பவராக இருப்பார்.

பிரிவொன்று நேரும் எனத் தெரிந்தும் பிரியத்தை குறையாமல் கொடுக்கும் மனம் கொண்டதுதான் காதல். இணைந்து வாழ்வது மட்டுமே காதல் இல்லை. நினைந்து வாழ்வதும் காதல் தான். காதலிக்கும் ஒருத்தருடன் உங்களின் வாழ்க்கை இணையாவிட்டாலும் அவர் வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷங்களைக் கண்டு தானும் சந்தோசம் கொள்ளும் பக்குவத்தை தருவது இந்தக் காதல் தான். இது இரு பாலருக்கும் பொருந்தும் ஒன்று. இதை சாத்தியப்படுத்துவது அன்பு மட்டுமே.

அன்பு மட்டுமே நீங்கள் கொள்ளும், சுகம், துக்கம், ஏக்கம், கோபம், அக்கறை, வெறுப்பு, பொறாமை, ஈர்ப்பு, என அனைத்து உணர்வுகளின் பிரதிபலிப்பிற்கு அடிப்படையாக உள்ளது. நீங்கள் அன்பு கொள்ளாத ஒரு நபரின் மேல் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை.
ஒரு பெண் ஒரு ஆணை விரும்பும்போது அவள் இந்த அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்திறாள் என்றால் அவள் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு தான் காரணம். பெண்கள் காதலிக்கும் போது ஆயிரம் விசயங்களை ஆண்களைடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது ஆண்களின் எண்ணம். பெண்கள் தான் காதிலிக்கும் ஒரு நபரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் ஒரு விசயத்தை ஆண்கள் ஆயிரம் விசயமாக பிரித்துப் பார்ப்பதால்தான் அவளின் எதிர்ப்பார்ப்பும் உங்களுக்கு ஆயிரமாகத் தெரிகிறது.

ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே. உங்களின் அன்பின் வெளிப்பாடு ஒன்றே அவர்களுக்கு போதும். அன்பின் வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் சரி. ஒரு சிலரைப் போல் நீங்கள் காதல் வசனங்கள் பேசத் தேவையில்லை, கண்ணும் கண்ணும் பல மணி நேரங்கள் கவி பாடத் தேவையில்லை. உங்களின் அன்பின் வெளிப்பாடான அக்கறையை மட்டும் காட்டுங்கள் போதும். அவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் கேட்டு தெரியாவிட்டாலும் அவள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது கேளுங்கள். நீங்கள் தூரமாக இருந்தாலும் அவளின் அருகில் இருக்கும் உணர்வை அவளுக்குக் கொடுங்கள். அதுதான் அன்பு. நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தும் நபராக இலாவிட்டாலும் உங்களின் பார்வை மட்டுமே அவள் மீது திருப்புங்கள். அதன் அர்த்தம் புரிந்தவளாகத்தான் உங்களை விரும்பும் பெண் இருப்பாள்.
தான் விரும்பும் ஒருத்தரைப் பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் நினைக்கின்றனர். இதனால் தான் உங்களிடம் பேசுவதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்களுக்கு அநாவசியமாகவும் எரிச்சலூட்டும் ஒன்றாகவும் இருக்கும். முக்கியமான விசயமாக இருந்தால் நானே சொல்ல மாட்டேனா என்பது ஆண்களின் எண்ணம்.

ஆனால் உங்களைப் பற்றி அக்கறை படும் பெண்ணுக்கு உங்கள் தொடர்பான அனைத்து விசயங்களும் முக்கியமானதாகத்தான் இருக்கும். சில சமயங்களை உங்களைப் பற்றி அவளிடம் பகிர்ந்துக் கொள்வது உங்களை பலவீனமானவராக உங்களை காட்டும் என எண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதுதான் அவளை பலவீனப்படுத்தும். என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் அவள் தவிக்கும் போதுதான் அவள் அதிகம் கஷடப்படுகிறாள்.

உங்களின் சுக துக்கங்கங்களில் அவளால் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாவிட்டாலும் உங்களின் எண்ணங்களை அவளுடம் பரிமாறிக்கொண்டாலே போதும். எந்த நிலையிலும் தன்னுடைய நிழல் தான் விரும்பும் ஆணிற்கு நிழல் தரும் ஒன்றாக இருக்கிறது என்ற திருப்தியே பெண்களுக்கு போதும்.

இதை செய்ய உங்களுக்கு தேவைப்படுவது ஆகக்குறைவு 5 நிமிடங்கள் மட்டுமே. இதை நீங்கள் செய்யாவிட்டால் அவர்கள் உங்களை நினைத்து ஏங்கும் காலம் என்பது அவர்களுக்கு தேவைப்படும் அந்த 5 நிமிடத்தை நீங்கள் அவர்களுக்காக ஒதுக்கும் வரை.
நீங்கள் விரும்பும் பெண்ணிடம் நீங்கள் அவரைப் பற்றி அதிகம் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் ஒரு பெண் ஏதாவது இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் தான் அதிகம் நேசிக்கும் ஒருத்தரிடம் மட்டுமே தன் நிலையைப் பற்றி கூறுவாள். அது போன்ற சமயத்தில் அவள் அழைத்து பேசும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள் என்று அவளுக்கும் தெரியும், உங்களுக்குத் தெரியும். இதனால்தான் சில ஆண்கள் மணிக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து பேசுவதில்லை. என்ன செய்கிறாய் என குறுஞ்செய்தி அனுப்புவதில்லை.

ஆனால் பெண்களின் மனநிலை இது அல்ல. அவள் உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் மேல் அக்கறை கொண்டு அவளை உங்களில் ஒருத்தியாக நடத்துங்கள். நீங்கள் நினைப்பதை அவளுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவளை நலம் விசாரிக்க யாரும் இல்லாவிட்டாலும் அவள் நலம் விசாரிக்க நீங்கள் ஒருத்தர் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதும் பேசாமல் அவளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டாலே தன்னுடைய கஷ்டங்களை மறந்தவளாக இருப்பாள் அவள். காதல் மிக சுலபமான ஒன்று. அவள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே!

More in வாழ்க்கை - Living

  • வாழ்க்கை - Living

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு

    By

    பெண்களே கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கருவில் இருக்கும் குழந்தையை...

  • வாழ்க்கை - Living

    காதல்!

    By

    ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால்,...

  • வாழ்க்கை - Living

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்

    By

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்  2012 இல் இருந்து ஒவ்வொருவருடமும் அக்டோபர் 11 இல் அனுசரிக்கப்படுகிறது  International Day of the...

  • வாழ்க்கை - Living

    Cancer Survivor 

    By

    புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல...

  • வாழ்க்கை - Living

    எதிர்பார்ப்பு

    By

    மனைவி கணவனிடம் அல்லது ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02....

To Top